Astrologer - Subha.lk
Subha.lk

L o a d i n g . . .

Subha.lk Menu
Log in Register
Subha.lk
Gangatheran Swami
Personal Information

ஜோதிடர் சாமி கங்காதரன் ஐயாவை பற்றிய விவரங்கள் இந்தியாவின் ராஜ சோழப் பரம்பரையை சேர்ந்தவர். இவர் ஐந்தாவது பரம்பரையாக ஜோதிட துறையில் மகாமேதையாக திகழ்கிறார். இலங்கை மட்டுமின்றி உலக தொலைக்காட்சிகளிலும் ஜோதிட, மனவள சம்பந்தமான தத்துவ விளக்கங்களை வழங்குவதோடு மக்களை நல்வழி நெறியுடனும் வாழ வழி அமைக்கின்றார்.

 

இவர் சிவ பக்தர், அகில உலக சைவ திருச்சபையின் இலங்கை, கொழும்பு மாவட்ட சமயத் தலைவரும் ஆவார். பல பட்டங்களைப் பெற்றவர். குறிப்பாக கலாநிதி,தேசபந்து, ஜோதிட ஆலோசகர், ஜோதிட சுடர், ஜோதிட மேதை, அகில இலங்கை சமாதான நீதிவான் என்பவைகளாகும்.

 

இவர் உலக நாடுகள் பலவற்றிக்கும் விஜயம் செய்து, அங்குள்ள மக்களின் வாழ்வின் முன்னேற்றத்திற்காக பல நற்செயல்களை செய்தவரும், வழிகாட்டியும் ஆவார். ஜோதிட துறையில் முப்பது ஆண்டுகளுக்கு மேல் நல்ல அனுபவம் மற்றும் தேர்ச்சியும் பெற்றவர். ஜோதிடம், விஞ்ஞானம்,கைரேகை, அதிர்ஷ்ட விஞ்ஞானம், அதிர்ஷ்ட மாணிக்கம், வாஸ்து மற்றும் கட்டிடக்கலை, யோக, தியானம், அற்புத சக்தி சிகிச்சை போன்றவற்றில் மிக நிபுணத்துவம் பெற்றவர்.

 

இவர் கூறிய பல நிகழ்வுகள் நூற்றுக்கு நூறு வீதம் துல்லியமாக நடைபெற்றவை, அதில் சில சுனாமி,இலங்கை விளையாட்டு துறையில் வெற்றியும், உலக மாற்றங்கள் என்பனவையாகும். அதுமாத்திரமன்றி தியானம் மூலம் ஒரு மனிதனின் முழு விபரங்களையும் அறியும் ஆற்றல் கொண்டவர். பௌர்ணமி யாக பூஜைகள் பல்லாயிரம் பேர்களுக்கு ஆசிர்வாதம் செய்து அன்னதானம் அளித்து, பாவங்களைப் போக்கி, வாழ்க்கையின் வெற்றி நடை போட உந்துகோலாக இருப்பவர். இவரின் கணிப்புகள் மிக தெளிவாகவும் நம்பகத் தன்மை வாய்ந்ததாகவும் வெளிப்பாடாகவும் இருப்பது உறுதி. இவரை தொடர்பு கொண்டால் க்உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கான விளக்கம் நிச்சயம் கிட்டும்.

Customer Reviews

Announcement

Articles

Privacy Policy, Terms & Conditions
© Copyright 2023 Subha.lk